Skip to main content

இந்தியாவின் SDG இலக்கு வாரியான திட்டங்கள் - இலக்கு 07: அனைவருக்கும் மலிவான மற்றும் சுகாதாரமான ஆற்றல் (Part-1)

இலக்கு 7: அனைவருக்கும் மலிவான மற்றும் சுகாதாரமான ஆற்றல்

1.சௌபாக்யா திட்டம் (பிரதான் மந்திரி சஹாஜ் பிஜிலி ஹர் கர் யோஜனா)

தொடங்கப்பட்ட ஆண்டு:

  • அக்டோபர் 2017.

அமைச்சகம் / தலைமை முகமை:

  • மின்சார அமைச்சகம்தலைமை முகமையாக ஊரக மின்சார வசதியளிப்புக் கழகம் (REC).

நோக்கங்கள்:

  • கிராமப்புறங்களில் உள்ள அனைத்து மின்சாரம் இல்லாத வீடுகளுக்கும் கடைசி மைல் வரை இணைப்பு மற்றும் மின் இணைப்புகளை வழங்குதல்.
  • நகர்ப்புறங்களில் (ஏழைகள் அல்லாத நகர்ப்புற குடும்பங்கள் தவிர்ப்பு) பொருளாதார ரீதியாக ஏழைமின்சாரம் இல்லாத வீடுகளுக்கு மின்சார இணைப்புகளை விரிவுபடுத்துதல்.
  • மின்சார விநியோக அமைப்பு நீட்டிப்புச் சாத்தியமில்லாத அல்லது செலவு குறைந்த தொலை தூர மற்றும் அணுக முடியாத கிராமங்களில், மின்சாரம் இல்லாத குடும்பங்களுக்கு சூரிய ஒளி மின்னழுத்த (SPV) அடிப்படையிலான தனித்த அமைப்புகளைச் செயல்படுத்துதல்.

பயனாளிகள்:

  • கிராமப்புறக் குடும்பங்கள் (குறிப்பாக BPL - வறுமைக் கோட்டிற்கு கீழே) மற்றும் பொருளாதார ரீதியாக ஏழை நகர்ப்புறக் குடும்பங்கள்.
  • மின்சார விநியோக அமைப்பு இணைப்பு சாத்தியமில்லாத தொலைதூர அல்லது அணுக முடியாத பகுதிகளில் மின்சாரம் இல்லாத வீடுகள்.

தகுதி அளவுகோல்கள்:

  • இந்தத் திட்டம் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள BPL குடும்பங்களை இலக்காகக் கொண்டுள்ளது.
  • பயனாளிகள் சமூகப் பொருளாதார மற்றும் சாதி மக்கள் தொகை கணக்கெடுப்பு (SECC) 2011 தரவு மூலம் அடையாளம் காணப் படுகிறார்கள்.
  • BPL தவிர மற்ற கிராமப்புற குடும்பங்கள் ரூ. 500க்கு மின் இணைப்பைப் பெறலாம்இதனை 10 சம தவணைகளில் செலுத்த வேண்டும்.
  • நகர்ப்புற BPL குடும்பங்கள் இலவச மின்சார இணைப்புகளைப் பெறுகின்றன.

பலன்கள்:

  • பொருளாதாரத்தில் ஏழைக் குடும்பங்களுக்கு இலவச மின் இணைப்பு.
  • தொலைதூரப் பகுதிகளுக்கு சூரிய சக்தியில் இயங்கும் அமைப்புகள்.
  • பயனாளிகளை உடனுக்குடன் அடையாளம் காணஅலைபேசிப் பயன்பாடுகள் மற்றும் கிராமங்களில் முகாம்கள் மூலம் எளிமைப்படுத்தப்பட்ட பதிவு.
  • திட்டத்தின் முன்னேற்றத்தை அருகில் இருக்கும் நிகழ்நேரக் கண்காணிப்பு மூலம் கண்காணித்தல்.

கூடுதல் தகவல்:

  • சில மாநிலங்களில்முன்பு நிராகரிக்கப்பட்ட அல்லது மின்சார விநியோக அமைப்புடன் இணைக்க விரும்பாத வீடுகளுக்கு மின்மயமாக்க கூடுதல் நேரம் வழங்கப் படுகிறது.
  • இந்தத் திட்டம் மத்திய மற்றும் மாநில அரசுகளின் கூட்டு முயற்சியாகும் என்பதோடு இது தீன் தயாள் உபாத்யாயா கிராம் ஜோதி யோஜனா (DDUGJY) உடன் இணைக்கப் பட்டுள்ளது.

2. பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY)

தொடங்கப்பட்ட ஆண்டு:

  • மே 1, 2016.

அமைச்சகம் / தலைமை முகமை:

  • பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம்.

நோக்கங்கள்:

  • சுகாதார மேம்பாடு: பாரம்பரிய சமையல் முறைகள் (விறகுநிலக்கரி மற்றும் மாட்டுச் சாணம் துண்டுகள் போன்றவை) உட்புறக் காற்று மாசுபாட்டால் ஏற்படும் உடல்நல அபாயங்களைக் குறைத்தல்.
  • பெண்களுக்கு அதிகாரமளித்தல்: சுத்தமான சமையல் எரிவாயுவை (LPG) வழங்குவதன் மூலம் பெண்களுக்கு அதிகாரமளித்தல்இது அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் விறகு சேகரிப்பதில் செலவிடும் நேரத்தைக் குறைக்கிறது.
  • சுற்றுச்சூழல் நிலைத்தன்மை: LPG போன்ற தூய்மையான எரிபொருட்களின் பயன்பாட்டை ஊக்குவிக்ககாடழிப்பு மற்றும் கார்பன் உமிழ்வைக் குறைத்தல்.

பயனாளிகள்:

  • கிராமப்புற மற்றும் தாழ்த்தப்பட்ட குடும்பங்கள்குறிப்பாக வறுமைக் கோட்டிற்கு (BPL) கீழ் உள்ள குடும்பங்கள் என்பதோடுமுதன்மையாக இந்தக் குடும்பங்களில் உள்ள பெண்களை இது இலக்காக வைக்கின்றது.
  • விறகுநிலக்கரி மற்றும் மாட்டு சாணத் துண்டுகள் போன்ற பாரம்பரிய சமையல் எரிபொருட்களைத் தற்போது பயன்படுத்தும் குடும்பங்கள்.

தகுதி அளவுகோல்கள்:

  • BPL குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு LPG இணைப்பு வழங்கப் படுகிறது.
  • சமூக-பொருளாதார சாதிவாரிக் கணக்கெடுப்பு (SECC) 2011 தரவு மூலம் பயனாளி அடையாளம் காணப் படுகிறது.
  • விண்ணப்பதாரர்கள் வீட்டில் LPG இணைப்பு எதுவும் வைத்திருக்கக் கூடாது.

பின்வருபவை போன்று பல்வேறு பின்தங்கிய பிரிவுகளைச் சேர்ந்த பெண்கள்:

  • பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (கிராமப்புறம்).
  • மிகவும் பின்தங்கிய வகுப்பினர்.
  • அந்த்யோதயா அன்ன யோஜனா (AAY).
  • பட்டியலிடப்பட்ட சாதியினர் (SC/ பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (ST) குடும்பங்கள்.
  • வனவாசிகள்தீவில் வசிப்பவர்கள்முதலியோர்.

பலன்கள்:

  • இலவச LPG இணைப்புகள்: தகுதியான பயனாளிகள் இலவச LPG இணைப்பைப் பெறுகிறார்கள்.
  • நிதி உதவி: BPL குடும்பங்களுக்கு ஒவ்வொரு LPG இணைப்புக்கும் ₹1,600 வழங்கப் படுகிறது.
  • முதல் முறையாக எரிவாயு மறுநிரப்புதல் சேவை மற்றும் அடுப்பு: உஜ்வாலா 2.0 திட்டத்தில் முதல் முறையாக எரிவாயு மறுநிரப்புதல் சேவை மற்றும் அடுப்பு வழங்கப் படுகிறது.
  • எரிவாயு மறுநிரப்புதல்களுக்கு மானியம்: 14.2 கிலோ சிலிண்டரின் முதல் ஆறு முறை எரிவாயு மறுநிரப்புதல்களுக்கு அல்லது 5 கிலோ சிலிண்டரின் எட்டு முறை எரிவாயு மறுநிரப்புதல்களுக்கு மானியம் வழங்கப் படுகிறது.
  • மாதந்திரத் தவணை (EMI) வசதி: பயனாளிகள் அடுப்பு மற்றும் முதல் எரிவாயு மறுநிரப்புதலின் விலையை ஈடுகட்ட EMI வசதியைப் பெறலாம்.
  • பஹல் திட்டம்: பயனாளிகள் தங்கள் வங்கிக் கணக்குகளில் நேரடி மானியங்களைப் பெற பஹல் திட்டத்தில் சேரலாம்.
  • சுகாதார நன்மைகள்: இது உட்புற காற்று மாசுபாட்டைக் குறைப்பதோடுசுவாச நோய்களைத் தடுப்பதன் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்தை இது கணிசமாக மேம்படுத்துகிறது.

கூடுதல் தகவல்கள்:

கட்டங்கள்:

  • கட்டம் 1: 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 8 கோடி LPG இணைப்புகளை வழங்கும் இலக்குடன் 2016 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டது.
  • இது 2016 ஆம் ஆண்டில் 62% ஆக இருந்த LPG பரவலை, 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் 99.8% ஆக உயர்த்தியது.
  • உஜ்வாலா 2.0: 2021 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டதுமார்ச் 2022 ஆம் ஆண்டிந மார்ச் மாதத்திற்குல் க்குள் கூடுதலாக 1 கோடி இணைப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டதுபின்னர் இது 2022 ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்திற்குள் சுமார் 1.6 கோடி இணைப்புகளுக்கு நீட்டிக்கப் பட்டது.

3. உஜாலா திட்டம்

தொடங்கப்பட்ட ஆண்டு:

  • மே 1, 2015.

அமைச்சகம் அல்லது தலைமை முகமை:

  • மின் அமைச்சகம்.
  • செயல்படுத்தும் நிறுவனம்: ஆற்றல் திறன்மிகு சேவைகள் நிறுவனம் (EESL).

நோக்கங்கள்:

  • ஆற்றல்-திறனுள்ள LED விளக்குகளின் பரவலான விநியோகத்தின் மூலம் ஆற்றல் செயல் திறனை மேம்படுத்துதல் மற்றும் மின்சார நுகர்வினைக் குறைத்தல்.
  • ஆற்றல் திறன் கொண்ட விளக்குகள் பற்றிய விழிப்புணர்வை அதிகரித்தல்.
  • பாரம்பரிய ஒளிரும் விளக்குகளுடன் ஒப்பிடும் போது, குறைந்த மின்சாரத்தைப் பயன்படுத்தும் மலிவு விலை LED விளக்குகளை வழங்குவதன் மூலம் மின்சாரக் கட்டணத்தைக் குறைத்தல்.
  • ஆற்றல் நுகர்வு மற்றும் CO2 உமிழ்வைக் குறைப்பதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்குப் பங்களித்தல்.

பயனாளிகள்:

  • இந்தியாவில் உள்ள அனைத்து வீட்டுக் குடும்பங்களுக்கும் அந்தந்த மின்சார விநியோக நிறுவனங்களிடமிருந்து மீட்டர் இணைப்புடன் மின்சார வசதி வழங்கப் படுகிறது.
  • நாடு முழுவதும் உள்ள கிராமப்புற மற்றும் நகர்ப்புறக் குடும்பங்கள்.

தகுதி அளவுகோல்கள்:

  • மீட்டர் மின் இணைப்பு உள்ள குடும்பங்கள்.
  • குறிப்பிட்ட வருமான அளவுகோல்கள் இல்லைஇருப்பினும்கிராமப்புறக் குடும்பங்கள் மலிவு விலையில் அணுகுவதற்கு முன்னுரிமை அளிக்கப் படுகின்றன.

பலன்கள்:

  • மலிவு விலையில் LED பல்புகள்: LED பல்புகள் மானிய விலையில் கிடைக்கின்றன (சந்தை விலை ரூ. 300-350 உடன் ஒப்பிடும்போது, ஒரு LED விளக்குக்கு ரூ. 70-80).
  • ஆற்றல் சேமிப்பு: LED விளக்குகள் குறைந்த ஆற்றலைப் பயன்படுத்துகின்றனஇதனால் மின் கட்டணங்கள் குறைக்கப் படுகின்றன.
  • சுற்றுச்சூழல் நன்மைகள்: LED விளக்குகள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டதன் காரணமாக COவெளியேற்றத்தில் (3.86 கோடி டன்கள்) குறிப்பிடத்தக்க குறைப்பு ஏற்பட்டுள்ளது.
  • மேம்படுத்தப்பட்ட விளக்குகள்: பாரம்பரிய விளக்குகளுடன் ஒப்பிடும்போது LED பல்புகள் சிறந்த மற்றும் ஆற்றலுடன் கூடிய விளக்குகளை வழங்குகின்றன.
  • உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கிறது: LED விளக்குகளின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் "மேக் இன் இந்தியா" முன்னெடுப்பை இது ஆதரிக்கிறது.
  • பாரிய ஆற்றல் சேமிப்பு: தோராயமாக ஆண்டுக்கு 47,778 மில்லியன் kWh ஆற்றல் சேமிக்கப் படுகிறது.

கூடுதல் தகவல்கள்:

  • உஜாலா திட்டம் என்பது உலகின் மிகப்பெரிய பூஜ்ஜிய-மானியம் கொண்ட உள்நாட்டு விளக்குத் திட்டமாகும்.
  • தெருவிளக்கு தேசியத் திட்டம் (SLNP) என்பது உஜாலாவின் கீழ் உள்ள மற்றொரு முன்னெடுப்பாகும் என்பதோடு இது இந்தியா முழுவதும் தெரு விளக்குகளுக்குப் பதிலாக ஆற்றல் - திறனுள்ள LED விளக்குகளை வழங்குகிறது.
  • 2021 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் தொடங்கப்பட்ட கிராம் உஜாலா திட்டம்கிராமப்புறக் குடும்பங்களை இலக்காகக் கொண்டுஅவர்களுக்கு மலிவு விலையில் LED விளக்குகளை ரூ. 10க்கு வேலை செய்யக் கூடிய ஒளிரும் பல்புகளுக்கு ஈடாக வழங்கப் படுகிறது.
  • இந்தத் திட்டம் கணிசமான ஆற்றல் சேமிப்புக்கும்பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதற்கும் வழி வகுத்தது.

4. பிரதான் மந்திரி கிசான் உர்ஜா சுரக்சா ஏவம் உத்தான் மகாபியன் (PM KUSUM) திட்டம்

தொடங்கப்பட்ட ஆண்டு:

  • 2019 (மார்ச் 31, 2026 வரை நீட்டிக்கப் பட்டுள்ளது).

அமைச்சகம் அல்லது தலைமை முகமை:

  • புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் (MNRE).

நோக்கங்கள்:

  • சூரிய ஆற்றலால் இயங்கும் பம்ப் நிறுவுதல்: பகுதி மின்சார விநியோக அமைப்பினால் சூரிய சக்தியில் இயங்கும் விவசாய பம்புகளை நிறுவுவதன் மூலம் டீசல் பம்புகளைச் சார்ந்திருப்பதைக் குறைக்கிறது.
  • ஏற்கனவே உள்ள பம்புகளை சூரியசக்திமயமாக்கல்: ஏற்கனவே உள்ள மின்சார விநியோக அமைப்பினால் இணைக்கப்பட்ட விவசாயப் பம்புகளை சூரிய ஆற்றலால் இயங்கும் பம்ப்பாக மாற்றுதல்.
  • தரிசு நிலத்தில் சூரிய மின் உற்பத்தி நிலையங்கள்: பயிர் செய்ய முடியாத நிலங்கள் அல்லது தரிசு நிலங்களில் சூரிய மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பது விவசாயிகளுக்கு, உபரி மின்சாரத்தை மின் கட்டணத்திற்கு விற்க அனுமதிக்கிறது.
  • தூய்மையான மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை ஊக்குவித்தல்: புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் பங்கை அதிகரிக்ககிராமப்புறங்களில் எரிசக்திப் பாதுகாப்பு மற்றும் நிலைத் தன்மைக்குப் பங்களிக்கிறது.
  • விவசாயிகளின் வருவாயை அதிகரித்தல்: சூரிய ஆற்றலால் இயங்கும் பம்ப் நிறுவுதல் மற்றும் சூரிய மின்னாற்றல் உற்பத்திக்கு நிதி உதவி வழங்குவதன் மூலம்விவசாயிகள் செலவுகளைக் குறைத்துஉபரி ஆற்றலில் இருந்து சம்பாதிக்கலாம்.
  • விவசாயத்தில் இருந்து டீசல் நீக்கம்: டீசல் பம்புகளின் பயன்பாட்டைக் குறைத்துவிவசாயத்தில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை மேம்படுத்துதல்.

பயனாளிகள்:

  • தனிப்பட்ட விவசாயிகள்: விவசாய நிலம் உள்ள விவசாயிகள்.
  • கூட்டுறவு மற்றும் சமூக அடிப்படையிலான நிறுவனங்கள்: இவை சூரிய மின் ஆற்றலால் இயங்கும் பம்ப் நிறுவல்கள் மற்றும் ஏற்கனவே உள்ள பம்புகளின் சூரியமயமாக்கலுக்கும் விண்ணப்பிக்கலாம்.
  • உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் (FPOs).
  • பஞ்சாயத்துகள்.
  • நீர்ப் பயனர் சங்கங்கள்.

தகுதி அளவுகோல்கள்:

  • விவசாய நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் PM KUSUM என்ற திட்டத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.
  • தனிப்பட்ட விவசாயிகள்கூட்டுறவுகள், FPO அமைப்புகள் மற்றும் பஞ்சாயத்துகள் திட்டத்தின் வெவ்வேறு கூறுகளுக்குத் தகுதியான முதன்மைக் குழுக்கள்.
  • இத்திட்டம் பகுதி மின்சார விநியோக அமைப்பினால் கிராமப்புறப் பகுதிகள் அல்லது நம்பகத் தன்மையற்ற மின்சார விநியோக அமைப்பு இணைப்புகள் உள்ள பகுதிகளில் கிடைக்கிறது.

பலன்கள்:

  • வருமானம் ஈட்டுதல்: சூரிய ஆற்றலால் இயங்கும் நிலையங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் உபரி மின்சாரத்தின் மூலம் கூடுதல் வருமானம் தரும் வகையில்விவசாயிகள் சூரிய மின்னாற்றலை உற்பத்தி செய்துமின் கட்டத்திற்கு விற்பனை செய்யலாம்.
  • நீர்ப் பாசனச் செலவைக் குறைத்தல்: டீசல் பம்புகளுக்குப் பதிலாக சூரிய மின்னாற்றலால் இயங்கும் பம்புகள்நீர்ப் பாசனத்திற்கான எரிபொருள் செலவைச் சேமிக்கின்றன.
  • விவசாயிகளுக்கான ஆற்றல் பாதுகாப்பு: நீர்ப் பாசனத் தேவைகளுக்கு நம்பகமானசுத்தமான மற்றும் நிலையான ஆற்றலுக்கான அணுகல்.
  • நீர்ப் பாதுகாப்பு: சூரிய சக்தியில் இயங்கும் அமைப்புகள் மூலம் திறமையான நீர்ப் பாசனம் மற்றும் நீர்ப் பயன்பாடு.
  • சுற்றுச்சூழல் நட்பு: பசுமை இல்ல வாயு உமிழ்வைக் குறைப்பதற்கும், புதுப்பிக்கத் தக்க ஆற்றலை ஊக்குவிப்பதற்கும் பங்களிப்பு.
  • பரவலாக்கப்பட்ட சூரிய மின் உற்பத்தி: இது பரிமாற்ற இழப்பைக் குறைக்க உதவுகிறதுமற்றும் விவசாயிகள் மற்றும் விநியோக நிறுவனங்களுக்கு (DISCOMS) பயனளிக்கிறது.
  • வேலை உருவாக்கம்: சூரிய ஆற்றலால் இயங்கும் பம்புகள் மற்றும் நிலையங்களின் நிறுவல் மற்றும் பராமரிப்பு குறிப்பிடத்தக்க வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
  • நீண்ட கால நிலைத் தன்மை: விவசாயிகள் பயிர் செய்ய முடியாத நிலங்கள் அல்லது தரிசு நிலத்தைச் சூரிய மின் உற்பத்திக்கு பயன்படுத்தலாம்இதன் மூலம் நீண்ட காலத்திற்கு நீர் மற்றும் நிதிப் பாதுகாப்பை உறுதி செய்யலாம்.

கூடுதல் தகவல்கள்:

திட்டத்தின் கூறுகள்:

  • கூறு A: விவசாயிகளுக்குச் சொந்தமான தரிசு நிலங்களில் சிறிய சூரிய மின் நிலையங்களை (2 MW வரை) நிறுவுதல்.
  • கூறு B: தனித்தனி சோலார் பம்புகளை (7.5 HP வரை) நிறுவுதல்.
  • கூறு C: தற்போதுள்ள 15 லட்சம் மின் இணைப்புள்ள விவசாய பம்புகளின் சூரியமயமாக்கல்.

நிதி உதவி:

  • விவசாயிகள் சூரிய ஆற்றலால் இயங்கும் பம்புகளுக்கு 60% மானியம் பெறுகிறார்கள், 30% கடனாக வழங்கப் படுகிறது என்ற நிலையில் மீதமுள்ள 10% விவசாயிகளால் ஏற்கப் படுகிறது.
  • இத்திட்டத்திற்கான மொத்த மத்திய நிதியுதவி ரூ. 34,422 கோடி, 2026 ஆம் ஆண்டுக்குள் சூரிய மின்சக்தி திறனை 34,800 மெகாவாட்டாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
  • இலக்கு: இந்தத் திட்டம் 20 லட்சம் விவசாயிகளுக்கு சூரிய ஆற்றலால் இயங்கும் பம்புகளை வழங்குவதையும்தற்போதுள்ள 15 லட்சம் மின்சார விநியோக அமைப்புடன் இணைக்கப்பட்ட பம்புகளை சூரியமயமாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

5. மேற்கூரை சூரிய உற்பத்தித் திட்டம்

தொடங்கப்பட்ட ஆண்டு:

  • 2014.

அமைச்சகம் அல்லது தலைமை முகமை:

  • புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை அமைச்சகம் (MNRE).

நோக்கங்கள்:

  • குடியிருப்புக் கட்டிடங்களுக்கு மின்சார விநியோக அமைப்புடன் இணைக்கப்பட்ட மேற்கூரை சூரிய உற்பத்தி அமைப்புகளை ஊக்குவித்தல்.
  • புதைபடிவ எரிபொருட்களைச் சார்ந்திருப்பதைக் குறைத்துசுற்றுச்சூழலுக்கு உகந்த சூரிய மின் உற்பத்தியை ஊக்குவித்தல்.
  • சூரிய ஆற்றல் துறையில் தனியார் முதலீடு மற்றும் ஒத்துழைப்பிற்கு ஏற்ற சூழலை உருவாக்குதல்.
  • பிரதான மின்சார விநியோக அமைப்புடன் இணைக்கப்படாத தொலைதூரப் பகுதிகளுக்கு மின்சாரம் வழங்குதல்ஆற்றல் அணுகல் மற்றும் மீள்தன்மையை மேம்படுத்துதல்.

பயனாளிகள்:

  • குடியிருப்பு நுகர்வோர்.
  • மாநில அரசுகள் மற்றும் தனியார் துறை பங்கேற்பாளர்கள்.
  • நிறுவல் மற்றும் இணைப்புகளை எளிதாக்கும் மின் விநியோக நிறுவனங்கள் (DISCOMs).

தகுதி அளவுகோல்கள்:

  • குடியிருப்புக் கட்டிடங்கள் மற்றும் சமூகங்கள்நிறுவனங்கள் மற்றும் வணிகங்கள் போன்ற பிற நிறுவனங்கள்மேற்கூரை சூரியத் தகடு நிறுவுவதற்கு தேவையான இடம் மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றைக் கொண்டிருத்தல் வேண்டும்.
  • தனிநபர்கள் தங்கள் உள்ளூர் மின் விநியோக நிறுவனங்கள் அல்லது தேசியத் தளத்தின் மூலம் பரிந்துரைக்கப்பட்ட தகுதி அளவுகோல்களை கடைபிடிக்க வேண்டும்.

பலன்கள்:

  • மேற்கூரை சூரிய உற்பத்தி நிறுவலுக்கு அமைச்சகத்தால் வழங்கப்படும் மானியங்கள்: 3 kW வரையிலான சூரிய உற்பத்தி அமைப்புகளுக்கு 40% மானியம் மற்றும் 3 kW முதல் 10 kW வரையிலான சூரிய உற்பத்தி அமைப்புகளுக்கு 20% மானியம் வழங்கப்படுகிறது.
  • சுயமாக உருவாக்கப்படும் சூரிய ஆற்றல் மூலம் மின் கட்டணமானது குறைக்கப் படுகிறது.
  • நிகர அளவீடு மூலம் சூரிய மின் உற்பத்தி அமைப்பால் செலுத்தப்படும் அதிகப்படியான ஆற்றலில் இருந்து வருமானம் பெறலாம்.
  • ஆற்றல் சுதந்திரம் மற்றும் மையப்படுத்தப்பட்ட மின் கட்டங்களை நம்பியிருப்பதைக் குறைத்தல்.
  • சூரிய மின் உற்பத்தித் துறையில் வேலைவாய்ப்பு உருவாக்கம் போன்ற பொருளாதார நன்மைகள்.

கூடுதல் தகவல்கள்:

  • ஆரம்பத்தில் 2022 ஆம் ஆண்டுக்குள் 40 ஜிகாவாட் மேற்கூரை சூரிய உற்பத்தித் திறனை அடைவதை இலக்காகக் கொண்ட இந்த இலக்கானது 2026 ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட உள்ளது.
  • இத்திட்டம் மாநிலத் தலைமை முகமைகள் மற்றும் மின் விநியோக நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப் படுகிறது.
  • குறிப்பிடத்தக்கச் செயல்திறன் கொண்ட மாநிலங்களில் குஜராத்மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் ஆகியவை அடங்கும்அதே நேரத்தில் உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் ஆகியவை குறைவான செயல்திறன் கொண்டவை.
  • மேற்கூரை சூரிய உற்பத்தி அமைப்பானது நிலையான வளர்ச்சிக்குப் பங்களிக்கிறது மற்றும் 2030 ஆம் ஆண்டளவில் 500 GW புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறனை அடைவதாக COP26 மாநாட்டில் செய்யப்பட்ட உறுதிமொழி போன்ற உலகளாவியக் கடமைகளை இந்தியா பூர்த்தி செய்ய உதவுகிறது.

இந்தியாவில் முக்கிய கூடுதல் சூரிய ஆற்றல் திட்டங்கள்

6. கிசான் உர்ஜா சுரக்சா ஏவம் உத்தான் மஹாபியன் (PM-KUSUM)

தொடங்கப்பட்ட ஆண்டு:

  • 2019.

அமைச்சகம் அல்லது தலைமை முகமை:

  • புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை அமைச்சகம் (MNRE).

நோக்கங்கள்:

  • மின்சார விநியோக அமைப்பினால் இணைக்கப்பட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மின் நிலையங்கள் மற்றும் சூரிய சக்தியால் இயங்கும் தண்ணீர்ப் பம்புகளை ஊக்குவித்தல்.
  • விவசாயத்தில் சூரிய மின் உற்பத்தித் திறனை அதிகரித்தல்.

பயனாளிகள்:

  • விவசாயிகள் மற்றும் விவசாயத் துறைகள்.

தகுதி அளவுகோல்கள்:

  • விவசாய நிலம் வைத்திருக்கும் விவசாயிகள்.

பலன்கள்:

  • நீர்ப் பாசனத்திற்கான சூரிய ஆற்றல் மற்றும் மின்சாரக் கட்டமைப்பினைச் சார்ந்திருப்பதைக் குறைத்தல்.
  • உபரி சூரிய ஆற்றல் விற்பனை மூலம் வருமானம்.

7. தேசிய காற்று-சூரியஒளி கலப்புக் கொள்கை

தொடங்கப்பட்ட ஆண்டு:

  • 2018.

அமைச்சகம் அல்லது தலைமை முகமை:

  • புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை அமைச்சகம் (MNRE).

நோக்கங்கள்:

  • காற்று-சூரிய கலப்பு அமைப்புகளை ஊக்குவித்தல்.
  • நிலம்வளங்கள் மற்றும் பரிமாற்ற உள்கட்டமைப்பு ஆகியவற்றின் பயன்பாட்டை மேம்படுத்துதல்.

பயனாளிகள்:

  • புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மேம்பாட்டாளர்கள்.

தகுதி அளவுகோல்கள்:

  • கலப்பின அமைப்புகளை நிறுவுவதற்கான தொழில்நுட்ப மற்றும் நிதித் திறன்களைக் கொண்ட மேம்பாட்டாளர்கள்.

பலன்கள்:

  • திறமையான புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி.
  • மின் உற்பத்தியில் குறைக்கப்பட்ட மாறுபாடுமின் உற்பத்தி அமைப்பின் நிலைத் தன்மைக்குப் பங்களிக்கிறது.

8. அடல் ஜோதி யோஜனா (AJAY)

தொடங்கப்பட்ட ஆண்டு:

  • 2016.

அமைச்சகம் அல்லது தலைமை முகமை:

  • புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை அமைச்சகம்.

நோக்கங்கள்:

  • குறைந்த மின்சார விநியோக அமைப்பு அணுகல் உள்ள பகுதிகளில் சூரிய ஆற்றலால் இயங்கும் தெரு விளக்குகளை நிறுவுதல்.

பயனாளிகள்:

  • பின்தங்கிய பகுதிகளில் உள்ள உள்ளூர் அரசாங்கங்கள் மற்றும் சமூகங்கள்.

தகுதி அளவுகோல்கள்:

  • மின்சார விநியோக அமைப்பு இல்லாத கிராமப்புறங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் அல்லது சமூகங்கள்.

பலன்கள்:

  • கிராமப்புற மற்றும் பகுதி  மின்சார விநியோக அமைப்பு உள்ள பகுதிகளில் மேம்படுத்தப்பட்ட ஒளி மற்றும் பாதுகாப்பு.
  • பின்தங்கிய பகுதிகளில் சூரிய சக்தியை ஊக்குவிக்கிறது.

9. சர்வதேச சூரிய ஆற்றல் கூட்டணி (ISA)

தொடங்கப்பட்ட ஆண்டு:

  • 2015.

அமைச்சகம் அல்லது தலைமை முகமை:

  • புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை அமைச்சகம் (MNRE).

நோக்கங்கள்:

  • சூரிய ஆற்றலை மேம்படுத்துதல் மற்றும் சூரிய ஆற்றல் வளம் கொண்ட நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பை எளிதாக்குதல்.
  • உலகெங்கிலும் உள்ள சூரிய மின்சக்தி திட்டங்களுக்கான மூலங்களைத் திரட்டுதல்.

பயனாளிகள்:

  • சூரிய ஆற்றல் நிறைந்த நாடுகள் மற்றும் சர்வதேச சூரிய ஆற்றல் மேம்பாட்டாளர்கள்.

தகுதி அளவுகோல்கள்:

  • கடக ரேகைக்கும், மகர ரேகைக்கும் இடையில் அமைந்துள்ள நாடுகள்.

பலன்கள்:

  • சூரிய ஆற்றல் வளர்ச்சியில் உலகளாவிய ஒத்துழைப்பு.
  • சூரிய ஆற்றலில் சிறந்த செயல்முறைகள் மற்றும் தொழில்நுட்பங்களைப் பகிர்தல்.

10. ஒரு சூரியன், ஓர் உலகம்ஒரு கட்டமைப்பு (OSOWOG)

தொடங்கப்பட்ட ஆண்டு:

  • 2021.

அமைச்சகம் அல்லது தலைமை முகமை:

  • புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை அமைச்சகம்.

நோக்கங்கள்:

  • உலகளாவிய ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட சூரிய ஆற்றல் வலையமைப்பை நிறுவுதல்.

பயனாளிகள்:

  • உலகம் முழுவதும் சூரிய ஆற்றல் பயன்படுத்துபவர்கள்.

தகுதி அளவுகோல்கள்:

  • உலகளாவிய சூரிய ஆற்றல் மின்சார விநியோக அமைப்புடன் இணைக்க விரும்பும் நாடுகள்.

பலன்கள்:

  • சூரிய ஆற்றல் வளங்களின் உலகளாவிய பகிர்வுசெலவுகளைக் குறைத்தல் மற்றும் ஆற்றல் பாதுகாப்பை அதிகரித்தல்.


Top

Comments

Post a Comment

Popular posts from this blog

VETRII IAS ACADEMY G1 TEST SERIES 2025 (Test 03)

  VETRII IAS ACADEMY G1 TEST SERIES 2025 Schedule  ➠  Click Here Test 03 QP ➠  Click Here Ans.Key ➠  Click Here Explain ➠  Click Here Explain.video ➠  Click Here

Shankar IAS Academy G4 Test Series (Test 03)

Shankar IAS Academy G4 Test Series    Schedule  ➠  Click Here   Test 03 Qp ➠  Click Here Ans.key ➠  Click Here Tamil Explain ➠  Click Here Gs Explain(Tamil) ➠  Click Here Gs Explain (English) ➠  Click Here

இந்தியாவின் SDG இலக்கு வாரியான திட்டங்கள் - இலக்கு1:வறுமையின்மை (Part-1)

  SDG  இலக்கு ஐக்கிய நாடுகளின் நிலையான மேம்பாட்டு இலக்குகள் ஐக்கிய நாடுகளின் நிலையான மேம்பாட்டு இலக்குகள் (SDGs) 2015 ஆம் ஆண்டு செப்டம்பர்  மாதத்தில், மொத்தமாக 193 அனைத்து  உறுப்பு நாடுகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இந்த இலக்குகள் 2030 ஆம் ஆண்டிற்குள் அமைதி, செழிப்பு மற்றும் பூமியின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான உலகளாவிய நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாகும். வறுமை, பசி, சுகாதாரம், கல்வி, காலநிலை மாற்றம், பாலினச் சமத்துவம், சுத்தமான நீர் மற்றும் சமூக நீதி போன்ற பல்வேறு உலகளாவியச் சவால்களை எதிர்கொள்ளும் வகையில், ஒவ்வொன்றும் குறிப்பிட்ட இலக்குகளுடன் மொத்தமாக 17 இலக்குகள் உள்ளன. SDGகளின் முக்கிய நோக்கம் மிகவும் நிலையான, உள்ளடக்கிய மற்றும் அனைவருக்கும் சமமான உலகத்தை உருவாக்குவதாகும். நோக்கம்: வறுமையை அனைத்து இடங்களிலும், அதன் அனைத்து வடிவங்களிலும் முடிவுக்குக் கொண்டு வருவதாகும். பட்டினியின்மை - அனைவருக்கும் சத்தான உணவு கிடைப்பதை உறுதி செய்தல். அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு. ...

VETRII IAS ACADEMY G4 TEST SERIES 2025 (Test 01)

  VETRII IAS ACADEMY G4 TEST SERIES 2025 Schedule ➠  Click here Test 01 QP ➠  Click Here Ans.Key ➠  Click Here Explanation ➠  Click Here Video. Explain ➠  Click Here

VETRII IAS ACADEMY G1 TEST SERIES 2025 (Test 01)

VETRII IAS ACADEMY G1 TEST SERIES 2025 Test 01 QP  ➠ Click Here Explain  ➠  Click Here Explain.Video ➠  Click Here

VETRII IAS ACADEMY G1 TEST SERIES 2025 (Test 07)

VETRII IAS ACADEMY G1 TEST SERIES 2025 Schedule  ➠  Click Here Test 07 QP ➠  Click Here Ans.Key ➠  Click Here Explain ➠  Click Here Explain.video ➠  Click Here Join Telegram channel   https://t.me/tnpsc2025posting

VETRII IAS ACADEMY G1 TEST SERIES 2025 (Test 05)

VETRII IAS ACADEMY G1 TEST SERIES 2025 Schedule  ➠  Click Here Test 05 QP ➠  Click Here Ans.Key ➠  Click Here   Explain ➠  Click Here Explain.video ➠  Click Here

இந்தியாவின் SDG இலக்கு வாரியான திட்டங்கள் - இலக்கு1:வறுமையின்மை (Part-2)

  4. பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா ( PMJDY) தொடங்கப்பட்ட தினம்: பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா (PMJDY) 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட்  15 ஆம் தேதி அன்று அறிவிக்கப் பட்டு 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28 தேதி அன்று தொடங்கப் பட்டது. அமைச்சகம் அல்லது தலைமை முகமை: இந்திய அரசின் நிதித் துறை அமைச்சகமானது பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான ஒரு தலைமை முகமை ஆகும். நோக்கங்கள்: மலிவு விலையில் நிதிசார் சேவைகள் மற்றும் சேவைகளுக்கான அணுகலை வழங்குதல். செலவுகளைக் குறைக்கவும், நிதிச் சேவைகளை நீட்டிக்கவும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல். வங்கியில் இணையாத மக்களுக்காக வங்கிக் கணக்குகளைத் திறப்பதன் மூலம் நிதி உள்ளடக்கத்தை மேம்படுத்துதல். பயனாளிகள்: PMJDY திட்டத்தின் முதன்மைப் பயனாளிகள் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்தவர்கள், அதிலும் குறிப்பாக முறையான வங்கிச் சேவைகளை அணுக முடியாதவர்கள். தற்போதுள்ள எந்த வங்கிக் கணக்குகளும் இல்லாத நபர்கள் PMJDY திட்டத்தின் கீழ் அடிப்படை சேமிப்புக் கணக்கைத் திறக்க தகுதியுடையவர்...

VETRII IAS ACADEMY G1 TEST SERIES 2025 (Test 02)

  VETRII IAS ACADEMY G1 TEST SERIES 2025 Schedule  ➠  Click Here   Test 02 QP ➠  Click Here Ans.Key ➠  Click Here Explain ➠  Click Here Explain.video ➠  Click Here