Skip to main content

இந்தியாவின் SDG இலக்கு வாரியான திட்டங்கள் - இலக்கு1:வறுமையின்மை (Part-1)

 SDG இலக்கு

ஐக்கிய நாடுகளின் நிலையான மேம்பாட்டு இலக்குகள்

  • ஐக்கிய நாடுகளின் நிலையான மேம்பாட்டு இலக்குகள் (SDGs) 2015 ஆம் ஆண்டு செப்டம்பர்  மாதத்தில், மொத்தமாக 193 அனைத்து  உறுப்பு நாடுகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
  • இந்த இலக்குகள் 2030 ஆம் ஆண்டிற்குள் அமைதி, செழிப்பு மற்றும் பூமியின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான உலகளாவிய நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாகும்.
  • வறுமை, பசி, சுகாதாரம், கல்வி, காலநிலை மாற்றம், பாலினச் சமத்துவம், சுத்தமான நீர் மற்றும் சமூக நீதி போன்ற பல்வேறு உலகளாவியச் சவால்களை எதிர்கொள்ளும் வகையில், ஒவ்வொன்றும் குறிப்பிட்ட இலக்குகளுடன் மொத்தமாக 17 இலக்குகள் உள்ளன.

  • SDGகளின் முக்கிய நோக்கம் மிகவும் நிலையான, உள்ளடக்கிய மற்றும் அனைவருக்கும் சமமான உலகத்தை உருவாக்குவதாகும்.

நோக்கம்:

  • வறுமையை அனைத்து இடங்களிலும், அதன் அனைத்து வடிவங்களிலும் முடிவுக்குக் கொண்டு வருவதாகும்.
  • பட்டினியின்மை - அனைவருக்கும் சத்தான உணவு கிடைப்பதை உறுதி செய்தல்.
  • அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு.
  • அனைவருக்கும் தரமான கல்வி, வாழ்நாள் முழுவதும் கற்றலை ஊக்குவிக்கிறது.
  • பாலினச் சமத்துவம் மற்றும் அனைத்துப் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு அதிகாரம் அளித்தல்.
  • அனைவருக்கும் சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதாரம்.
  • அனைவருக்கும் மலிவான மற்றும் சுகாதாரமான ஆற்றல்.
  • கண்ணியமான வேலை மற்றும் பொருளாதார வளர்ச்சி.
  • தொழிற்சாலை, புத்தாக்கம் மற்றும் உள்கட்டமைப்பு.
  • நாடுகளுக்குள்ளும் நாடுகளுக்கிடையிலும் குறைக்கப்பட்ட ஏற்றத்தாழ்வுகள்.
  • வளம் குன்றா நகரங்கள் மற்றும் சமூகங்கள்.
  • பொறுப்பான முறையில் நுகர்வு மற்றும் உற்பத்தி.
  • காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான காலநிலை நடவடிக்கை.
  • நீரினுள் வாழ்பவை - கடல் வளங்களைப் பாதுகாத்தல்.
  • நிலத்தில் வாழ்பவை - சுற்றுச்சூழல் மற்றும் பல்லுயிர்ப் பாதுகாப்பு.
  • அமைதி, நீதி மற்றும் சிறந்த நிறுவனங்கள்.
  • இலக்குகளுக்கான கூட்டாண்மை - உலகளாவிய ஒத்துழைப்பை வலுப்படுத்துதல்.

  • நிலையான மேம்பாட்டு இலக்குகள் யாரும் பின்தங்கியிருக்கக் கூடாது என்பதோடு எதிர்காலச் சந்ததியினருக்கு பூமியினைப் பாதுகாப்பதை உறுதி செய்கிறது.
  • அவை அரசாங்கங்கள், வணிகங்கள் மற்றும் தனிநபர்களின் செயல்களுக்கு வழி காட்டுகின்றன.

இந்தியா மற்றும் நிலையான வளர்ச்சி இலக்குகள்

  • இந்தியா, மிகப்பெரிய மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் ஒன்றாக, ஐக்கிய நாடுகளின் நிலையான மேம்பாட்டு இலக்குகளை (SDGs) அடைவதில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.
  • இந்தியாவின் பரந்த மற்றும் மாறுபட்ட சமூக-பொருளாதார நிலப்பரப்பு, இந்த இலக்குகளை அடைவதில் தனித்துவமானச் சவால்களை எதிர்கொள்கிறது.
  • நாட்டின் பெரிய மக்கள்தொகை, பிராந்திய ஏற்றத்தாழ்வுகள் மற்றும் பரவலான வறுமை ஆகியவை நிலையான மேம்பாட்டு நன்மைகள் அனைத்து குடிமக்களையும் சென்றடைவதை உறுதி செய்வதை கடினமாக்குகிறது.
  • எவ்வாறாயினும், இந்த உலகளாவிய நோக்கங்களை முன்னேற்றுவதற்கு இந்தியாவும், அதன் வளர்ந்து வரும் பொருளாதாரம் மற்றும் இளைஞர்களின் மக்கள் தொகை ஆகியனவும் குறிப்பிடத் தக்க வாய்ப்புகளைக் கொண்டுள்ளது.
  • SDG களுக்கான இந்தியாவின் அணுகுமுறை அதன் குறிப்பிட்டத் தேவைகளுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும் என்பதோடு கிராமப்புற-நகர்ப்புறப் பிளவுகள், சுகாதார அணுகல், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் பொருளாதார உள்ளடக்கம் போன்ற பிரச்சினைகளிலும் கவனம் செலுத்த வேண்டும்.

  • நல்ல முன்னேற்றம் ஏற்பட்டாலும், 2030 ஆம் ஆண்டிற்குள் SDGகளை அடைவதற்கு அனைத்துத் துறைகளிலும் தொடர்ச்சியான கண்டுபிடிப்பு மற்றும் முயற்சி தேவைப்படுகிறது.


இந்தியாவின் SDG இலக்கு வாரியான திட்டங்கள்


SDG இலக்கு 01 – வறுமையின்மை

1. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (MGNREGS)

ஆண்டு:

  • 2005 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

அமைச்சகம் அல்லது தலைமை முகமை:

  • ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகம்

நோக்கம்:

  • ஒரு நிதியாண்டில், திறமையற்ற உடலுழைப்புத் தொழிலில் ஈடுபடும் வயது வந்த உறுப்பினர்கள் உள்ள ஒவ்வொரு கிராமப்புறக் குடும்பத்திற்கும், குறைந்தபட்சம் 100 நாட்களுக்கு உத்தரவாதமான கூலி வேலைவாய்ப்பை வழங்குதல்.
  • கிராமப்புறங்களில் நீடித்தச் சொத்துக்களை உருவாக்குதல்.

  • கூலி வேலை வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் கிராமப்புறக் குடும்பங்களின் வாழ்வாதாரப் பாதுகாப்பை மேம்படுத்துதல்.

பயனாளி:

  • அனைத்துக் கிராமப்புறக் குடும்பங்களும், குறிப்பாக 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள், திறமையற்ற உடலுழைப்புத் தொழிலை செய்யத் தயாராக உள்ளவர்கள்.
  • இதில் பயனாளிகளில் குறைந்தது மூன்றில் ஒரு பங்காவது பெண்கள் இருக்க வேண்டும் என்ற நிலையில் இதில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது,.

தகுதி:

  • கிராமப்புறக் குடும்பங்களில் உள்ள (நகர்ப்புற மாவட்டங்களைத் தவிர) வயது வந்தோர்கள், திறமையற்ற ரீதியிலான உடல் உழைப்பில் ஈடுபடத் தயாராக உள்ள நபர்கள்.
  • பழங்குடியினர் குடும்பங்கள் மற்றும் இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ளும் பகுதிகளுக்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்ட பகுதியில் உள்ள நபர்கள் (எ.கா. வறட்சி).

பலன்கள்:

  • ஒரு நிதியாண்டில் ஒரு குடும்பத்திற்கு குறைந்தபட்சம் 100 நாட்கள் வேலைவாய்ப்பு உத்தரவாதத்தை அளிக்கிறது.
  • விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் வேலையைக் கோருவதற்கும், பெறுவதற்கும் உரிமையை அளிக்கிறது.
  • சரியான நேரத்தில் வேலை வழங்கப்படாவிட்டால் (15 நாட்களுக்குள்) வேலையின்மை உதவித் தொகைக்கான உரிமையை வழங்குகிறது.
  • மருத்துவ உதவி, குடிநீர், நிழல் அமைப்பு போன்ற அத்தியாவசியப் பணியிட வசதிகளுக்கான உரிமையை தருகிறது.
  • மாநிலங்களுக்கு மாநிலங்கள் என்று சில குறிப்பிட்ட மாறுபாடுகளுடன் கிராமப்புறங்களில் பணவீக்கத்தைப் பிரதிபலிக்கும் வகையில் விவசாயத் தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CPI-AL) அடிப்படையிலான ஊதிய விகிதங்கள்.
  • சமீபத்திய ஊதிய விகித உயர்வு: 2024-2025 ஆம் ஆண்டில், திறமையற்ற உடலுழைப்புத் தொழிலாளர்களுக்கான ஊதிய விகிதங்கள் மாநிலத்தைப் பொறுத்து 3-10% வரை அதிகரிக்கப் பட்டுள்ளன.

  • இயற்கைச் சீற்றங்கள் அல்லது பாதிக்கப்படக் கூடிய குறிப்பிட்ட குடும்பங்களுக்கு (எ.கா. பட்டியலிடப் பட்டப் பழங்குடியினர்) கூடுதலாக 50 நாட்கள் வேலை வழங்குகிறது.
  • ஊதிய மட்டத்தில் ஊதியம் மற்றும் பொருள் விகிதம் 60:40 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • இத்திட்டத்தின் கீழ் அனைத்துத் திட்டங்களுக்கும் கிராம சபைகள் மூலம் சமூகத் தணிக்கை செய்யப் படுகிறது.
  • இத்திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டச் சொத்துக்களைப் புவியிடக் குறியீடாகச் செய்தல்.

கூடுதல் தகவல்:

  • சொத்துக்களின் புவியிடக் குறியீடு: சொத்துகளின் உருவாக்கத்தைக் கண்காணிக்க இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (ISRO) மற்றும் தேசியத் தொலை உணர்தல் மையத்துடன் (NRSC) இணைந்து புவி MGNREGA என்ற வசதியினைப் பயன்படுத்துதல்.
  • சமூக தணிக்கை: வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வுக்காக கிராம சபையின் வழக்கமான தணிக்கைகள்.
  • ஜன்மன்ரேகா: MGNREGA சொத்துக்களின் செயல்திறன் மற்றும் தாக்கத்தை மதிப்பிடுவதற்கான குடிமக்களின் கருத்துக் கருவி.

  • திட்டம் 'UNNATI': MGNREGA பயனாளிகள் பகுதி நேர வேலைவாய்ப்பிலிருந்து முழு நேர வேலை வாய்ப்பிற்கு மாற உதவும் ஒரு திறன் முயற்சி.

  • ஒப்பந்ததாரர் இல்லாத மாதிரி அமைப்பு: MGNREGS திட்டத்தின் கீழ் எந்த ஒப்பந்ததாரர்களும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்; எனவே அனைத்து வேலைகளும் உள்ளூர்ச் சமூகத்தால் நேரடியாக செயல்படுத்தப்படுகின்றன.

2. தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா - தேசிய கிராமப்புற வாழ்வாதாரப் பணி (DAY-NRLM)

ஆண்டு:

  • 2010 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது (2016 ஆம் ஆண்டு பெயர் மாற்றம் செய்யப் பட்டது)

அமைச்சகம் அல்லது தலைமை முகமை:

  • ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகம், இந்திய அரசு.

நோக்கம்:

  • வறுமையைக் குறைப்பதன் மூலம் ஏழைக் குடும்பங்களுக்கு ஆதாயமான சுயதொழில் மற்றும் திறமையான கூலி வேலை வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் நிலையான மற்றும் பன்முகப் படுத்தப் பட்ட வாழ்வாதார விருப்பங்களுக்கு வழி வகுத்தல்.

  • இத்திட்டம் முதன்மையாகப் பெண்களைக் குறி வைத்து அவர்களுக்கான சுய உதவிக் குழுக்களை (SHGs) உருவாக்குவதன் மூலம் அவர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது என்பதோடு அவை நிதிச் சேவைகளை வழங்குவதற்கும், வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் வேண்டிய வகையிலான நிறுவனங்களாகச் செயல்படுகின்றன.

  • இந்தத் திட்டம் முறையான கடன், வாழ்வாதார பல்வகைப்படுத்தல் மற்றும் பொதுச் சேவைகள் மற்றும் உரிமைகளுக்கான அணுகலை ஊக்குவிக்கிறது.

பயனாளி:

  • கிராமப்புற ஏழைக் குடும்பங்கள், குறிப்பாக சுய உதவிக் குழுக்கள் (SHGs) மூலம் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் கவனம் செலுத்துகின்றன.

  • இந்தக் குழுக்களின் உருவாக்கம் மற்றும் நிர்வாகத்தில் பெண்களின் தீவிர ஈடுபாட்டுடன், அனைத்துக் கிராமப்புற ஏழை குடும்பங்களையும், சுய உதவிக் குழுக்களாக அணிதிரட்டுவதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

தகுதி:

  • கிராமப்புறக் குடும்பங்கள், குறிப்பாக வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்கள்.
  • ஒவ்வொரு சுய உதவிக் குழுவும் பெண்களைக் கொண்டதாக உள்ள வகையில் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள்.
  • பல பாதிப்புகளை எதிர்கொள்ளும் விளிம்புநிலைச் சமூகங்கள் மற்றும் குடும்பங்களுக்கு சிறப்பான முக்கியத்துவம் கொடுக்கப் படுகிறது.

பலன்கள்:

  • முறையான கடன் மற்றும் வங்கி இணைப்புகள் உட்பட நிதிச் சேவைகளுக்கான அணுகல்.
  • வாழ்வாதாரத்தைப் பல்வகைப்படுத்துதல் மற்றும் வலுப்படுத்துதல் ஆகியவற்றுக்கான ஆதரவு.
  • கிரிஷி சாகிஸ் (சாகிஸ் - உதவியாளர்கள்), பசு சாகிஸ் மற்றும் பேங்க் சாகிஸ் போன்ற சமூக வள நபர்கள் (CRPs) மூலம் பெண்களுக்குப் பயிற்சி, திறன் மேம்பாடு மற்றும் அதிகாரமளித்தல்.

  • உறுப்பினர்களின் கடன் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் வங்கி நிதியைப் பெறுவதற்கும் சுய உதவிக் குழுக்களுக்கு ₹10,000-15,000 சுழலும் நிதிகள் (RF) வழங்குதல்.
  • குழு மட்டத்தில் கூட்டு நடவடிக்கைகளுக்காக, சமூக முதலீட்டு நிதி மூலம் SHG கூட்டமைப்புகளுக்கு ஆரம்ப மூலதனத்தை அளித்தல்.

  • சுயதொழில் மற்றும் வேலை வாய்ப்புகளை மேம்படுத்த கிராமப்புற இளைஞர்களுக்குத் திறன் மேம்பாடு மற்றும் பயிற்சி.

கூடுதல் தகவல்:

முக்கிய அம்சங்கள்:

  • SHG உருவாக்கம்: வங்கி இணைப்பு ஏற்பாடுகளில் கவனம் செலுத்தும் வகையில் ஒவ்வொரு கிராமப்புற ஏழை குடும்பத்திலிருந்தும் ஒரு பெண் சுய உதவிக் குழுவில் (SHG) இருப்பார்.

நான்கு முக்கியக் கூறுகள்:

  • சமூக அணி திரட்டல் மற்றும் திறன் மேம்பாடு: கிராமப்புறச் சமூகங்களை மேம்படுத்துதல் மற்றும் நிறுவனங்களை உருவாக்குதல்.
  • நிதி உள்ளடக்கம்: நிதிச் சேவைகளுக்கான அணுகலை உறுதி செய்தல்.
  • வாழ்வாதார மேம்பாடு: நிலையான வாழ்வாதாரங்கள் மற்றும் சந்தை இணைப்புகளுக்கான ஆதரவு.
  • ஒருங்கிணைப்பு: முழுமையான வறுமைக் குறைப்புக்கான பல்வேறு அரசாங்கத் திட்டங்களுடன் ஒத்துழைத்தல்.
  • திறன் மேம்பாடு: கிராமப்புறச் சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் (RSETIs) மூலம் கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் சுய வேலைவாய்ப்புக்கானப் பயிற்சி அளித்தல்.
  • பண்ணை வாழ்வாதாரங்கள்: மகிளா கிசான் சசக்திகரன் பரியோஜனா (MKSP) மற்றும் பிற விவசாயத் தலையீடுகள் மூலம் விவசாயம் சார்ந்த வாழ்வாதாரங்களுக்கு முக்கியத்துவம் அளித்தல்.
  • சமூக வள நபர்கள் (CRPs): விவசாயம் (கிருஷி சாகிஸ்), கால்நடைகள் (பசு சாகிஸ்), வங்கி (வங்கி சாகிஸ்) போன்ற பல்வேறு சிறப்புப் பகுதிகளில் பெண்களுக்குப் பயிற்சி அளித்தல்.
  • சுழலும் நிதி (RF) & சமூக முதலீட்டு நிதி (CIF): SHGகளுக்கு வேண்டிய பணி மூலதனத்திற்கும் மற்றும் SHG கூட்டமைப்புகளுக்கு கூட்டு நடவடிக்கைகளுக்கும் என்று நிதி உதவி வழங்குதல்.

சமீபத்திய வளர்ச்சிகள் (FY 2023-24):

  • கடன் வழங்கல்கள்: 2023 ஆம் ஆண்டின் டிசம்பர் மாத நிலவரப்படி, 39 லட்சம் சுய உதவிக் குழுக்கள் ₹1.12 லட்சம் கோடி கடன்களைப் பெற்றுள்ளன.

மகிளா கிசான் அதிகாரமளித்தல்:

  • 31.03 லட்சம் பெண் விவசாயிகள் வேளாண்-சுற்றுச்சூழல் நடைமுறை ரீதியிலான தலையீடுகளின் கீழ் உள்ளனர்.
  • 21.84 லட்சம் குடும்பங்கள் ஊட்டச்சத்து மிக்க வேளாண் தோட்டங்களைக் கொண்டுள்ளன.
  • பண்ணை வாழ்வாதாரத் தலையீடுகளின் கீழ் 1,16,284 கிராமங்கள் உள்ளன.
  • 5.76 லட்சம் பெண் விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளாக (FPOs) ஒழுங்கமைக்கப் பட்டுள்ளனர்.

பண்ணை வாழ்வாதாரத் தலையீடுகள்:

  • மஹிளா கிசான் சசக்திகரன் பரியோஜனா (MKSP): சமூக நிறுவனங்களை வலுப்படுத்துவதன் மூலமும், நிலையான விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலமும் பெண் விவசாயிகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட துணைக் கூறாகும்.

  • தீவிரத் தொகுதிகளில் பண்ணை வாழ்வாதாரங்கள்: இலக்குப் பகுதிகளில் நிலையான விவசாயம், கால்நடைகள் மற்றும் மரமற்ற வனப் பொருட்களை (NTFP) ஊக்குவித்தல்.
  • கரிம வேளாண்மை மற்றும் மதிப்புச் சங்கிலிகள்: கரிம வேளாண்மையை ஊக்குவித்தல், பண்ணை மதிப்புச் சங்கிலிகளை உருவாக்குதல் மற்றும் சந்தைகளுக்குச் சிறந்த அணுகலுக்கான சந்தை இணைப்புகளை வழங்குதல்.

செயல்படுத்தல்:

  • இந்தத் திட்டம், மாநில ஊரக வாழ்வாதார இயக்கங்கள் (SRLMs) மற்றும் மாவட்டப் பணி மேலாண்மை அலகுகளால் (DMMUs) மேற்பார்வையிடப்பட்டு, நாடு முழுவதும் படிப்படியாக செயல்படுத்தப்படுகிறது.
  • மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலின் தொகுதித் திட்ட மேலாண்மை அலகுகளால் (BMMUs) உள்ளூர் அளவிலானச் செயல்படுத்தல் மேற்கொள்ளப்படுகிறது.
  • கட்ட விரிவாக்கம்: இந்தத் திட்டம் 2023-24 ஆம் ஆண்டிற்குள் அனைத்துக் கிராமப்புற ஏழைக் குடும்பங்களையும் அணி திரட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

3. தீன்தயாள் அந்த்யோதய யோஜனா - தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் (DAY-NULM)

தொடங்கப்பட்ட தினம்:

  • செப்டம்பர் 23, 2013.

அமைச்சகம் அல்லது தலைமை முகமை:

  • வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத் துறை அமைச்சகம், இந்திய அரசு.

திட்டம் மற்றும் குறிக்கோள்கள்

  • தீன்தயாள் அந்த்யோதய யோஜனா - தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டம் (DAY-NULM) என்றும் அறியப்படுகிற தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டம் (NULM) நகர்ப்புற ஏழை குடும்பங்களிடையே வறுமை மற்றும் பாதிப்பைக் குறைக்க இந்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட ஒரு திட்டம் சார்ந்த முன்னெடுப்பாகும்.

  • நகர்ப்புற ஏழைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதன் மூலம் சுயவேலைவாய்ப்பு மற்றும் திறமையான ஊதிய வேலை வாய்ப்புகளை வழங்குவதே இந்தத் திட்டத்தின் முதன்மையான நோக்கமாகும்.

அதன் முக்கிய நோக்கங்கள் பின்வருமாறு:

  • நகர்ப்புற ஏழைகளுக்கு அதிகாரமளித்தல்: திறன் மேம்பாடு, சுயவேலை வாய்ப்புகள் மற்றும் நிலையான வருமான ஆதாரங்களுக்கான அணுகலை வழங்குவதன் மூலம் நகர்ப்புற ஏழைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • தெரு வியாபாரிகளுக்கான ஆதரவு: இது நகர்ப்புற தெருவோர வியாபாரிகளின் வாழ்வாதார சவால்களை நிவர்த்தி செய்கிறது, அவர்களுக்குப் பொருத்தமான விற்பனை இடங்கள், நிறுவன நிதி மற்றும் சமூகப் பாதுகாப்புச் சலுகைகள் கிடைப்பதை உறுதி செய்கிறது.
  • சமூக பாதுகாப்பு: நகர்ப்புற ஏழைகளுக்கு வீட்டு வசதி, சுகாதாரம் மற்றும் கல்விக்கான அணுகலை உறுதி செய்கிறது.
  • பொருளாதார உள்ளடக்கத்தை உருவாக்குதல்: திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு மூலம் நகர்ப்புற ஏழைகளுக்கு முக்கியமாகப் பொருளாதாரத்தில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளை வழங்குதல்.

இலக்குப் பயனாளிகள்

  • வீடற்ற தனிநபர்கள்: நிரந்தரத் தங்குமிடங்கள் இல்லாமல் தெருக்களில் வாழும் மக்கள்.
  • தெரு வியாபாரிகள்: பொது இடங்களில் பொருட்கள் மற்றும் சேவைகளை விற்பனை செய்யும் முறைசாராத தொழிலாளர்கள்.
  • நகர்ப்புற ஏழைகள்: நகரங்களில் தங்களின் பொருளாதார நிலையை மேம்படுத்த ஆதரவு தேவைப் படுகிற குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள்.

தகுதி அளவுகோல்கள்

திட்டத்திற்கான இலக்கு குழுக்களில் பின்வருவன அடங்கும்:

  • வீடற்ற தனிநபர்கள்: நகர்ப்புறங்களில் நிரந்தர வீடுகள் இல்லாத மக்கள்.
  • தெரு வியாபாரிகள்: தங்கள் வாழ்வாதாரத்திற்காக தெருக்களை நம்பியிருக்கும் முறைசாரா விற்பனையாளர்கள்.
  • நகர்ப்புற ஏழைக் குடும்பங்கள்: நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்கள், அதிலும் முதன்மையாக பட்டியலிடப்பட்டச் சாதியினர், பட்டியலிடப்பட்டப் பழங்குடியினர், பெண்கள், சிறுபான்மையினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட பின்தங்கிய குழுக்களைச் சேர்ந்தவர்கள்.

முக்கிய அம்சங்கள் மற்றும் நன்மைகள்

நிதி ஆதரவு:

  • சுய உதவிக் குழுக்கள் (SHGs): நகர்ப்புற ஏழை SHGகள் குறைந்த வட்டியில் கடன்களை அணுகலாம் (ஆண்டுதோறும் 7%) என்பதோடு பெண்கள் தலைமையிலான குழுக்களுக்கு கூடுதலாக 3% வட்டி மானியம் என்ற வகையில் இது பயனுள்ள விகிதத்தை சுமார் 4% ஆகக் குறைக்கிறது.

  • சுயதொழில் ஆதரவு: குறுந்தொழில்களைத் தொடங்க விரும்பும் தனிநபர்கள் மற்றும் குழுக்கள் ₹2 லட்சம் (தனிப்பட்ட முயற்சிகளுக்கு) அல்லது ₹10 லட்சம் (குழு முயற்சிகளுக்கு) வரை கடன் பெறலாம்.
  • தெருவோர வியாபாரிகளுக்கான உதவி: விற்பனை மண்டலங்களை நிறுவுவதற்கான நிதி உதவி, கடன் அணுகல், திறன் பயிற்சி மற்றும் குறு நிறுவன மேம்பாட்டிற்கான நிதி உதவி வழங்கப் படுகிறது.

நிதி அல்லாத ஆதரவு:

  • தெரு வியாபாரிகள்: விற்பனையாளர்களுக்கான வேலை நிலைமைகளை மேம்படுத்த அத்தியாவசிய உள்கட்டமைப்பு (நீர் வழங்கல், சாலைகள், விளக்குகள், கழிவுகளை அகற்றுதல்) கொண்ட விற்பனை மண்டலங்களை மேம்படுத்துதல்.
  • நகர்ப்புற வீடற்றவர்களுக்கான தங்குமிடம்: வீடற்ற நபர்களுக்கு அத்தியாவசியச் சேவைகளுடன் கூடிய நிரந்தரத் தங்குமிடங்களை அமைப்பதற்கும், இயக்குவதற்கும் மற்றும் நிர்வகிப்பதற்கும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு (ULBs) தேவையான உதவியை வழங்குகிறது.

  • திறன் மேம்பாடு: வேலைவாய்ப்பை அதிகரிக்க அல்லது புதிய தொழில் தொடங்க உதவும் விரிவான பயிற்சித் திட்டங்கள்.

DAY-NULM திட்டத்தின் கீழ் துணைத் திட்டங்கள்

  • புதுமையான மற்றும் சிறப்புத் திட்டங்கள் (ISP): வாழ்வாதாரத்தை உருவாக்குவதற்கான புதிய அணுகுமுறைகளை ஊக்குவிப்பதோடு மொத்த மத்திய நிதியில் 5% வரையில் சிறப்புத் திட்டங்களுக்கு ஒதுக்கப் படுகிறது.
  • சுய-வேலைவாய்ப்புத் திட்டம் (SEP): தனிநபர்கள் மற்றும் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப் படும் கடன்களுடன், சுயதொழில் மற்றும் குறுந்தொழில் வளர்ச்சிக்கான நிதி உதவியையும் வழங்குகிறது.

  • நகர்ப்புறத் தெரு விற்பனையாளர்களுக்கான ஆதரவு (SUSV): நிதி உதவி, பயிற்சி மற்றும் பொருத்தமான விற்பனை இடங்களை உருவாக்குவதன் மூலம் தெரு வியாபாரிகளின் வேலை நிலைமைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • திறன் மேம்பாடு மற்றும் பயிற்சி (CBT): நகர்ப்புற வறுமை ஒழிப்பில் ஈடுபட்டுள்ள தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அவர்களின் திறன்கள் மற்றும் வறுமை-குறைப்பு உத்திகளை செயல்படுத்தும் திறனை மேம்படுத்த பயிற்சி அளிக்கிறது.
  • சமூக அணிதிரட்டல் மற்றும் நிறுவன மேம்பாடு (SM&ID): நிதி மற்றும் சமூகச் சேவைகளுக்கான அணுகலை மேம்படுத்துவதற்காக SHGகள் மற்றும் கூட்டமைப்புகளை உருவாக்குவதன் மூலம் நகர்ப்புற ஏழைகளுக்கு அதிகாரமளிப்பதில் கவனம் செலுத்துகிறது.
  • நகர்ப்புற வீடற்றவர்களுக்கான தங்குமிடம் (SUH): நகர்ப்புற வீடற்றத் தனிநபர்களுக்கு அடிப்படைச் சேவைகளுடன் கூடிய தங்குமிடங்களை அணுகுவதை உறுதி செய்கிறது.
  • திறன் பயிற்சி மற்றும் வேலை வழங்குதலின் (EST&P) மூலம் வேலைவாய்ப்பு: திறன் மேம்பாட்டிற்கான பயிற்சியை வழங்குவதோடு தனி நபர்கள் சிறந்த வேலை வாய்ப்புகளைப் பெற அல்லது அவர்களின் சொந்தத் தொழில்களை அமைக்க உதவுகிறது.

NULM திட்டத்தின் நன்மைகள் (DAY-NULM)

நிதி நன்மைகள்:

  • குறைந்த வட்டிக் கடன்கள்: சுய உதவிக் குழுக்கள் மற்றும் குறு நிறுவனங்களுக்கு 4-7% வரை குறைந்த வட்டி விகிதங்களைக் கொண்ட கடன்கள் வழங்கப் படுகின்றன.
  • தெரு விற்பனையாளர்களுக்கான ஆதரவு: கடன், திறன் மற்றும் விற்பனையாளர்களுக்கான சந்தை மேம்பாட்டு ஆதரவுக்கான அணுகலை அளிக்கிறது.
  • சுய தொழில் கடன்கள்: நகர்ப்புற ஏழைகள் தங்கள் சொந்தத் தொழில்கள் அல்லது குறு நிறுவனங்களைத் தொடங்க உதவுகிறது.

நிதி அல்லாத பலன்கள்:

  • தெருவோர வியாபாரிகளுக்கான உள்கட்டமைப்பு மேம்பாடு: முறையான உள்கட்டமைப்புடன் நியமிக்கப்பட்ட விற்பனை மண்டலங்களை வழங்குதல்.
  • வீடற்றவர்களுக்கான தங்குமிடம்: அத்தியாவசியச் சேவைகளுடன் நிரந்தரத் தங்குமிடங்களை அமைத்தல்.
  • திறன் மேம்பாடு: சிறந்த வேலைவாய்ப்பு மற்றும் தொழில் முனைவோர் வாய்ப்புகளுக்கான திறன் மேம்பாடு.


             

Comments

Popular posts from this blog

VETRII IAS ACADEMY G1 TEST SERIES 2025 (Test 03)

  VETRII IAS ACADEMY G1 TEST SERIES 2025 Schedule  ➠  Click Here Test 03 QP ➠  Click Here Ans.Key ➠  Click Here Explain ➠  Click Here Explain.video ➠  Click Here

Shankar IAS Academy G4 Test Series (Test 03)

Shankar IAS Academy G4 Test Series    Schedule  ➠  Click Here   Test 03 Qp ➠  Click Here Ans.key ➠  Click Here Tamil Explain ➠  Click Here Gs Explain(Tamil) ➠  Click Here Gs Explain (English) ➠  Click Here

VETRII IAS ACADEMY G4 TEST SERIES 2025 (Test 01)

  VETRII IAS ACADEMY G4 TEST SERIES 2025 Schedule ➠  Click here Test 01 QP ➠  Click Here Ans.Key ➠  Click Here Explanation ➠  Click Here Video. Explain ➠  Click Here

VETRII IAS ACADEMY G1 TEST SERIES 2025 (Test 01)

VETRII IAS ACADEMY G1 TEST SERIES 2025 Test 01 QP  ➠ Click Here Explain  ➠  Click Here Explain.Video ➠  Click Here

VETRII IAS ACADEMY G1 TEST SERIES 2025 (Test 07)

VETRII IAS ACADEMY G1 TEST SERIES 2025 Schedule  ➠  Click Here Test 07 QP ➠  Click Here Ans.Key ➠  Click Here Explain ➠  Click Here Explain.video ➠  Click Here Join Telegram channel   https://t.me/tnpsc2025posting

VETRII IAS ACADEMY G1 TEST SERIES 2025 (Test 05)

VETRII IAS ACADEMY G1 TEST SERIES 2025 Schedule  ➠  Click Here Test 05 QP ➠  Click Here Ans.Key ➠  Click Here   Explain ➠  Click Here Explain.video ➠  Click Here

இந்தியாவின் SDG இலக்கு வாரியான திட்டங்கள் - இலக்கு 07: அனைவருக்கும் மலிவான மற்றும் சுகாதாரமான ஆற்றல் (Part-1)

இலக்கு  7:  அனைவருக்கும் மலிவான மற்றும் சுகாதாரமான ஆற்றல் 1.சௌபாக்யா திட்டம் (பிரதான் மந்திரி சஹாஜ் பிஜிலி ஹர் கர் யோஜனா) தொடங்கப்பட்ட ஆண்டு: அக்டோபர்  2017. அமைச்சகம் / தலைமை முகமை: மின்சார அமைச்சகம் ;  தலைமை முகமையாக ஊரக மின்சார வசதியளிப்புக் கழகம் ( REC). நோக்கங்கள்: கிராமப்புறங்களில் உள்ள அனைத்து மின்சாரம் இல்லாத வீடுகளுக்கும் கடைசி மைல் வரை இணைப்பு மற்றும் மின் இணைப்புகளை வழங்குதல். நகர்ப்புறங்களில் (ஏழைகள் அல்லாத நகர்ப்புற குடும்பங்கள் தவிர்ப்பு) பொருளாதார ரீதியாக ஏழை ,  மின்சாரம் இல்லாத வீடுகளுக்கு மின்சார இணைப்புகளை விரிவுபடுத்துதல். மின்சார விநியோக அமைப்பு நீட்டிப்புச் சாத்தியமில்லாத அல்லது செலவு குறைந்த தொலை தூர மற்றும் அணுக முடியாத கிராமங்களில், மின்சாரம் இல்லாத குடும்பங்களுக்கு சூரிய ஒளி மின்னழுத்த ( SPV)  அடிப்படையிலான தனித்த அமைப்புகளைச் செயல்படுத்துதல். பயனாளிகள்: கிராமப்புறக் குடும்பங்கள் (குறிப்பாக  BPL -  வறுமைக் கோட்டிற்கு கீழே) மற்றும் பொருளாதார ரீதியாக ஏழை நகர்ப்புறக் குடும்பங்கள். மின்சார விநியோக அமைப்பு இணைப்பு சாத்தியமில்லா...

இந்தியாவின் SDG இலக்கு வாரியான திட்டங்கள் - இலக்கு1:வறுமையின்மை (Part-2)

  4. பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா ( PMJDY) தொடங்கப்பட்ட தினம்: பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா (PMJDY) 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட்  15 ஆம் தேதி அன்று அறிவிக்கப் பட்டு 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28 தேதி அன்று தொடங்கப் பட்டது. அமைச்சகம் அல்லது தலைமை முகமை: இந்திய அரசின் நிதித் துறை அமைச்சகமானது பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான ஒரு தலைமை முகமை ஆகும். நோக்கங்கள்: மலிவு விலையில் நிதிசார் சேவைகள் மற்றும் சேவைகளுக்கான அணுகலை வழங்குதல். செலவுகளைக் குறைக்கவும், நிதிச் சேவைகளை நீட்டிக்கவும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல். வங்கியில் இணையாத மக்களுக்காக வங்கிக் கணக்குகளைத் திறப்பதன் மூலம் நிதி உள்ளடக்கத்தை மேம்படுத்துதல். பயனாளிகள்: PMJDY திட்டத்தின் முதன்மைப் பயனாளிகள் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்தவர்கள், அதிலும் குறிப்பாக முறையான வங்கிச் சேவைகளை அணுக முடியாதவர்கள். தற்போதுள்ள எந்த வங்கிக் கணக்குகளும் இல்லாத நபர்கள் PMJDY திட்டத்தின் கீழ் அடிப்படை சேமிப்புக் கணக்கைத் திறக்க தகுதியுடையவர்...

VETRII IAS ACADEMY G1 TEST SERIES 2025 (Test 02)

  VETRII IAS ACADEMY G1 TEST SERIES 2025 Schedule  ➠  Click Here   Test 02 QP ➠  Click Here Ans.Key ➠  Click Here Explain ➠  Click Here Explain.video ➠  Click Here